திங்கள், ஜனவரி 25, 2021

what-they-told

img

மாவட்ட, ஒன்றியத் தலைவர்கள் தேர்தலையும் வீடியோ பதிவு செய்ய உத்தரவு

சென்னை,ஜன.10- மாவட்ட ஊராட்சி மற்றும் ஊராட்சி ஒன்றி யத் தலைவர், துணைத் தலைவர் பதவி களுக்கான மறைமுக தேர்தலை வீடியோ பதிவு செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சேலம் மாவட்டம், அயோத்தியாபட்டினம் ஊராட்சி ஒன்றியத் தலைவர் பதவிக்கு திமுக சார்பில் போட்டியிடும் ஒன்றியக் கவுன்சி லர் புவனேஸ்வரி, மறைமுக தேர்தல் நடை பெறும் இடத்துக்கு பாதுகாப்பு வழங்கவும், தேர்தல் நடவடிக்கைகளை வீடியோ பதிவு செய்யவும் கோரி வழக்கு தொடர்ந்தார். வழக்கு நீதிபதி ஆதிகேசவலு முன்பு விசாரணைக்கு வந்த போது மாநில தேர்தல் ஆணையம் தரப்பில், நாளை நடைபெறும் தேர்தலுக்கு போதிய காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அதுகுறித்து டிஜிபி பிறப்பித்த சுற்றறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதனை ஏற்ற நீதிபதி, மறைமுக வாக்குப் பதிவு மையங்கள் மற்றும் அதன்  வளாகங்கள் முழுமைக்கும் உரிய பாது காப்பு வழங்குவதோடு, வீடியோ பதிவு செய்யவும் உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தார்.

;