weather

img

8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு...

சென்னை:
தமிழகத்தில் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியிருப்பதாவது:

கன்னியாகுமரி கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால் 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. புதுக்கோட்டை, நாகை, சிவகங்கை, நெல்லை, ராமநாதபுரம், தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை தொடர வாய்ப்பு உள்ளது. தென் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மிதமான மழை பெய்யும். சென்னை நகர், புறநகர் பகுதிகளில் 2 நாட்களுக்கு லேசான மழையே பெய்யும்.குமரிக்கடல், மாலத்தீவு, லட்சத் தீவு, அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.