weather

img

அடுத்த 3 நாட்களுக்கு கனமழை வாய்ப்பு....

சென்னை:

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் (மே 12) வெளியிட்ட அறிவிப்பு:

“தமிழகத்தின் மேல் 1.5 கி.மீ உயரத்தில் நிலவும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக, நீலகிரி, குமரி , ஈரோடு, திருப்பூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும், நீலகிரி, குமரி, நெல்லை, தென் காசி மாவட்டங்களில் ஓரிரு இடங் களில் இடி மின்னலுடன் கூடிய கனமழையும் பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.

மே 14 அன்று நீலகிரி, கோவை, தென் தமிழக மாவட்டங் கள், டெல்டா மாவட்டங்கள், மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழையும், ஏனைய மாவட் டங்கள் மற்றும் புதுவை பகுதிகளில்பெரும்பாலான இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

அதே போல் மே 15ஆம் தேதி மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், தென் கடலோர மாவட்டங்கள் மற்றும் காரைக் கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் காற்றுடன் கூடிய கனமழை முதல் மிக கனமழை
யும், ஏனைய மாவட்டங்கள் மற்ற புதுவை பகுதிகள், அநேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும் பெய்யக்கூடும்.

;