weather

img

கேரளாவில் கனமழைக்கு வாய்ப்பு....  ஏழு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை....

திருவனந்தபுரம்:
கேரளாவில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், 7 மாவட்டங்களுக்கு மஞ்சள்எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.யாஸ் புயலின் தாக்கம் காரணமாக கேரளாவில் வரும் புதன்கிழமை முதல் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், எர்ணாகுளம், இடுக்கி, கோட்டயம், ஆழப்புழா, பத்தினம் திட்டா, கொல்லம் ஆகிய 7 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. 

யாஸ் புயல் காரணமாக தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்தியவானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. யாஸ் புயல் வரும் 26 ஆம் தேதி கிழக்கு கடற்கரையில் ஒடிசா- மேற்கு வங்காளம் இடையே கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கேர ளாவுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தாலும், மீனவர்கள் கடலுக்கு செல்லஎச்சரிக்கை எதுவும் விதிக்கப்படவில்லை.  யாஸ் புயல் காரணமாக தென்மேற்கு  பருவ மழை முன்கூட்டியே தொடங்க வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

வங்க கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு
வங்காள விரிகுடா மற்றும் அந்தமான் கடல் பகுதியில் கடலோர காவல்படையின், கப்பல்கள், விமானங்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் ஈடுபடுத்தப் பட்டுள்ளன. வங்க கடல் பகுதியில் நுழையும் கப்பல்களுக்கு எச்சரிக்கை விடுக்கசர்வதேச பாதுகாப்பு வலைதளமும் செயல்படுத்தப்பட்டு ‘நேவ்டெக்ஸ்’ எச்சரிக்கைகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டு வருகின்றன.வங்க கடல் பகுதியில் நங்கூரமிட்டு நிற்கும் கப்பல்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும்படியும், பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளும் படியும் அறிவுறுத்தப்பட்டு ள்ளன. கடலோர காவல் படையின் 31 பேரிடர் மீட்பு குழுக்கள் படகுகள் மற்றும் லைப் ஜாக்கெட்டுகளுடன் தயார்நிலையில் வைக்கப் பட்டுள்ளன.

;