weather

img

டெல்லிக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் 

புதுடெல்லி : டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பலத்த மழை பெய்து வருவதால் , இந்திய வானிலை ஆய்வுமையம் , டெல்லிக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுத்துள்ளது.

டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.இதனால் கடும் போக்குவரத்து நெரிசல்களும் ஏற்பட்டுள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

டெல்லியில் , 2010 ஆம் ஆண்டிற்குப் பிறகு , அதிக அளவில் மழையின் அளவு  பதிவாகியுள்ளது இதுவே முதல் முறை . மேலும், தற்போது பெய்து வரும் பருவமழை 1000 மி.மீ  அளவை தாண்டியுள்ளது . 

டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் பெய்து வரும் கன மழை இன்னும் 12 மணி நேரத்திற்கு நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக , டெல்லியில் தேசிய தலைநகர் பகுதிகளான பகதூர்கர், குருகிராம், மனேசர், பரீசதாபாத், நொய்டா, தாத்ரி, கிரேட்டர் நொய்டா உள்ளிட்ட பகுதிகளில் அடுத்த இரண்டு மணி நேரத்திற்குப் பலத்த மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் , இந்திய வானிலை ஆய்வு மையம் , டெல்லிக்கு "ஆரஞ்சு எச்சரிக்கை" விடுத்துள்ளது.