வெள்ளி, பிப்ரவரி 26, 2021

weather

img

வடகிழக்கு பருவமழை: இயல்பைவிட அதிகம்...

சென்னை:
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள  அனைத்து மாவட்டங்களிலும் இயல்பைவிட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது.

வடகிழக்கு பருவ மழை நீடித்த கடந்த 1 ஆம் தேதியிலிருந்து கடந்த 18 ஆம் தேதி வரை தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட கூடுதலாகவே மழை பதிவாகி உள்ளது.குறிப்பாக சென்னையில் இயல்பு மழை 19.8 மில்லி மீட்டர், ஆனால் பெய்தது 194.4 மில்லி மீட்டராகும். அதேபோல் காஞ்சிபுரத்தில் இயல்பு மழை 11.7, பெய்தது 100.7. செங்கல்பட்டு இயல்பு 14.2, பெய்தது 164.3., திருவள்ளூர் இயல்பு 15.7, பெய்தது 127.5. மதுரை இயல்பு 9.4, ஆனால் பெய்தது 131.2, திருச்சி இயல்பு 10, பெய்தது 137.1. கோவை இயல்பு 7.6, பெய்தது 96.9. நெல்லை இயல்பு 31.4, பெய்தது 374.3.இவ்வாறு அனைத்து மாவட்டங்களிலும் இயல்பை விட அதிகமாகவே மழை பெய்துள்ளது என்று வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
 

;