சென்னை:
தென் கிழக்கு அரபிக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 24 மணி நேரத்தில் தென் தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்த அறிவிப்பில், அடுத்த 24 மணி நேரத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், நெல்லை, தென்காசி, தூத் துக்குடி, குமரி ஆகிய மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழையும், வட தமிழகத் தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது.சென்னையில் நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய் யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக தூத்துக்குடி மாவட் டம் ஒட்டப்பிடாரத்தில் 12 செண்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.