weather

img

புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது....

சென்னை:
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை முன்கூட்டியே உருவானதாக சென்னை வானிலை மையம் அறிவித்துள் ளது.தென்கிழக்கு வங்கக் கடலில் 23 ஆம் தேதி உருவாக இருந்த காற்றழுத்த தாழ்வு நிலை சனிக்கிழமையன்று (நவ.21) உருவானது என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.இந்த காற்றழுத்த தாழ்வு நிலை சென்னையில் இருந்து வங்கக்கடலில் 1200 கி.மீ தொலைவில் உருவாகி இருக்கிறது.இதனால் கடலோர மற்றும் தென் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்துள்ளது.

8 மாவட்டங்களில் மழை 
தென்கிழக்கு வங்கக் கடல் பரப்பில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியால் மதுரை, தேனி, நெல்லை, தூத்துக்குடி,தென்காசி, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தூத்துக்குடி தவிர பிற மாவட்டங்களில் வறண்ட வானிலை காணப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

;