technology

img

வாட்ஸ்அப் அப்டேட்…விரைவில் வாய்ஸ் நோட் ஸ்டேட்டஸ் வைக்கும் வசதி அறிமுகம்!  

மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் புதிய அம்சங்களை வெளியிட்டு வருகிறது. 

நவீன உலகில் வாட்ஸ்அப், முகநூல், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணையதளம் நம் வாழ்வில் பெரும் பங்காற்றி வருகிறது. இதையடுத்து, வாட்ஸ்அப் நிறுவனத்தை பேஸ்புக் நிறுவனம் வாங்கியதையடுத்து, புதுபுது அப்டேட்களை பயனர்களுக்கு வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில், வாட்ஸ்அப்பில் வீடியோ கால் பேசும்போது முகத்திற்கு பதிலாக அவதார் வீடியோ அனிமேஷன், பெண்களுக்கான வாட்ஸ்அப் பீரியட் ட்ராக்கர் உள்ளிட்ட சிறப்பம்சங்கள் விரைவில் வரவுள்ளதாக வாட்ஸ்அப் நிறுவனம் தெரிவித்திருந்தது.  

இந்நிலையில் வாட்ஸ்அப் நிறுவனம் விரைவில் ஒரு புதிய அம்சத்தை கொண்டுவர உள்ளது. அதாவது தற்போது வீடியோ மற்றும் புகைப்படங்களை மட்டுமே வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸாக வைத்துக்கொண்டிருந்த நிலையில், விரைவில் வாய்ஸ் நோட்களையும் ஸ்டேட்டஸாக வைக்கும் அம்சத்தை அந்நிறுவனம் அறிமுகப்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வழக்கமான ஸ்டேட்டஸ் போன்று இதையும் வாட்ஸ்அப் பயனர்கள் தேர்வு செய்பவர்களுக்கு மட்டுமே காண்பிக்கும் வகையிலும் இருக்கிறது.  

இதையடுத்து, இன்னொரு அம்சத்தையும் வாட்ஸ்அப் செயலில் அறிமுகமாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  அது என்னவென்றால், வாட்ஸ்அப் செயலியில் பெறும் மெசெஜ்களுக்கு குறிப்பிட்ட 6 ஈமோஜிகள் மட்டுமே ரிப்ளையாக அனுப்ப அனுமதிக்குட்பட்டு வந்த நிலையில் விரைவில் அனைத்து ஈமோஜிகளும் அனுமதிக்கப்பட உள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. 

;