technology

img

ரோந்து பணிக்காக வடிவமைக்கப்பட்ட ரோபோ - சிங்கப்பூரில் அறிமுகம் 

சிங்கப்பூரில் பொதுவெளியில் நடைபெறும் மோசமான நடத்தைகளைக் கண்காணிக்க ரோபோக்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது . அதிநவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்ட இந்த  ரோபோக்கள்  தற்போது சோதனைக்காக மக்கள் அதிகமாகக் கூடும் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது . 

உலகின் பாதுகாப்பான நாடுகளின் வரிசையில் சிங்கப்பூர் ஏற்கனவே இடம்பிடித்துள்ளது . இந்நிலையில், தற்போது சமூகப் பாதுகாப்பினை இன்னும் பலப்படுத்தும் வகையில் சிங்கப்பூரின் ஹோம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு இரண்டு கண்காணிப்பு ரோபோக்களை வடிவமைத்துள்ளது. இந்த ரோபோக்களுக்கு "ஸேவியர்" என்று பெயரிடப்பட்டுள்ளது . 

இந்த ரோபோக்கள் சமூகத்தில் நடைபெறும் மோசமான நடத்தைகளைக் கண்டறிவதுடன் , கட்டுப்பாட்டு அறைக்குச் செய்தியும் தெரிவிக்கின்றது ,  இதனால் கட்டுப்பட்டு அறையில் உள்ள காவல் படையினர் அங்கு விரைந்து வந்து பிரச்சனைகளைச் சரி செய்வது போன்று இந்த ரோபோக்களை தயாரித்து உள்ளனர். 

தற்போது நடைபெற்று வரும் மூன்று வாரக் கால சோதனையில், இந்த ரோபோக்கள் , கொரோனா விதிமுறைகளை மீறுதல் , தடைசெய்யப்பட்ட பகுதிகளில் புகை பிடித்தல் , வாகனங்களை முறையற்ற இடங்களில் நிறுத்துதல் போன்ற குற்றச் செயல்களைக் கண்டுபிடித்துள்ளது. 

மேலும், இந்த ஸேவியர் ரோபோக்கள் பாதுகாப்பு காவல் அதிகாரிகளின் ரோந்து பணிச்சுமையைக் குறைக்கும் என்று ஹோம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழு தெரிவித்துள்ளனர்.