புதிய ஸ்மார்ட் ரிங்கை உருவாக்கி வருகிறது சாம்சங் நிறுவனம்.
சாம்சங் நிறுவனம், ’கேலக்ஸி ரிங்’ என்ற பெயரில் விரலில் அணியக்கூடிய ஸ்மார்ட் சாதனத்தை உருவாக்கி வருகிறது.
இச்சாதனத்தை சாம்சங் நிறுவனம் ஜப்பானை சேர்ந்த மெய்கோ நிறுவனத்துடன் இணைந்து உருவாக்குகிறது. இதயத் துடிப்பு, இரத்த அழுத்தம் உள்ளிட்ட பல அம்சங்களை கொண்டுள்ள கேலக்ஸி வாட்ச்சைவிட, உடல்நலத்தை மிக துல்லியமாக டிராக் செய்யும் வசதிக்கொண்ட ஸ்மார்ட் ரிங்கை உருவாக்கி வருகிறது. பயனர்கள் இவற்றை ஸ்மார்ட்போன் ஆப் மூலம் பார்க்க முடியும்.
ஏற்கனவே புதிய கேலக்ஸி ரிங் மாடலுக்கான காப்புரிமை பெற்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
இது மட்டுமின்றி எக்ஸ்டென்டட் ரியாலிட்டி சாதனங்களுடன் இணைந்து செயல்படும் திறன் கொண்ட ஸ்மார்ட் ரிங்குக்கு காப்புரிமை பெறுவதற்கான பணிகளில் சாம்சங் எலெக்டிரானிக்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.