tamilnadu

img

கொளவாய் ஏரியை தூர்வாரி நீரின் கொள்ளளவை அதிகரித்திடுக மக்களவை உறுப்பினர் செல்வத்திடம் சிபிஎம் மனு

செங்கல்பட்டு, செப்.5-  செங்கல்பட்டு கொளவாய் ஏரியை தூர் வாரி, ஆழப்படுத்த வேண்டும் என கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட கட்சி சார்பில் காஞ்சிபு ரம் மக்களவை உறுப்பினர் செல்வத்தி டம் மனு கொடுக்கப்பட்டது. மக்களவைத் தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்ட ணியின் சார்பில் காஞ்சிபுரம் மக்கள வைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் எம்.செல்வம்,  பொது மக்களைச் சந்தித்து நன்றி தெரிவித்து வரு கின்றார். இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர் இ.சங்கரை வியாழனன்று (செப். 5) நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். அப்போது, திமுக நகரச் செயலாளர் நரேந்திரன், சிபிஎம் மாவட்டக்குழு உறுப்பினர் வி.அரிகிருஷ்ணன், செங்கல்பட்டு பகுதிச் செயலாளர் கே.வேலன் உட்பட பலர் உடனிருந்த னர். இதனைத் தொடர்ந்து  மாவட்டச் செயலாளர் இ.சங்கர், செங்கல்பட்டு கொளவாய் ஏரியினை தூர் வாரி ஆழப்படுத்திட நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி செல்வத்திடம் கோரிக்கை மனு வழங்கினார். அதன் விவரம் வருமாறு:- செங்கல்பட்டு ரயில் நிலையத்தை யொட்டி அமைந்துள்ள கொளவாய் ஏரி செங்கல்பட்டின் முக்கிய அடையாளமாகும். கோடையிலும் வற்றாத இந்த ஏரியில் சுற்றுலாத் துறை மூலம் கடந்த காலங்களில் படகு சவாரிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  ஆனால், கடந்த சில ஆண்டுகளாகப்  படகு சவாரி கைவிடப்பட்டுள்ளது. தற்போது ஏரியில் மீன்குஞ்சுகள்,  இறால் வளர்ப்பு பணிகள் நடை பெற்று வருகின்றது.  பல  ஆண்டுகளாக ஏரி தூர்  வாரப்படாததால்  நீரின் கொள்ள ளவு குறைந்துள்ளது. ஏரியைச் சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளது. மேலும் ஏரி முழுவதும் ஆகாயத் தாமரை, கருவேலமரங்கள் முளைத்து நகரின் கொசுத்தொல்லை மற்றும் பூச்சிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. மழைக்காலங்க ளில் நீர்பிடிப்பையும் தாண்டி கிராமங்களில் தண்ணீர் தேங்கும் நிலை உள்ளது. பிளாஷ்டிக்  உள்ளிட்ட குப்பைகளைக் கொட்டுவ தால் மேலும் தண்ணீர் மாசடைந்து வருகின்றது.   மேலும் செங்கல்பட்டு நகரின் கழிவு நீர் முழுவதும்  சுத்திகரிக்கப்படா மல்  ஏரியில் கலந்து  சுகாதார சீர்கேடு ஏற்படுகின்றது.   தூர்வார நிதி ஒதுக்கியும் பணி துவங்கப்பட வில்லை.ஏரியைத் தூர்வாரி நீரின் கொள்ளளவை அதிகப்படுத்தி மீண்டும் சுற்றுலாத் துறை சார்பில் படகு சவரி நடத்திட உரிய நடவடிக்கை எடுத்திட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;