tamilnadu

img

இடது சாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

குடியுரிமை திருத்த சட்டத்தை கண்டித்து  இடது சாரி கட்சிகள் சார்பில் செங்கல்பட்டு பழையபேருந்து நிலையம் எதிரில் வியாழனன்று (டிச.19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் .இ.சங்கர் தலைமை தாங்கினார்.  சிபிஐ மாவட்டச் செயலாளர் மேகநாதன், சிபிஐஎம்எல் மாவட்டச் செயலாளர் ஜான்பால், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர்கள் எஸ்.கண்ணன், பிரமிளா, மதிமுக மாவட்டச் செயலாளர் பார்த்திபன், திமுக நகரச் செயலாளர் நரேந்திரன், மனிதநேய மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் ஷாஜகான், காங். நகரச் செயலாளர் பாஸ்கர், விசிகட்சி மாவட்டச் செயலாளர் தமிழரசன், முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் தாவூத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.