tamilnadu

img

குடிமனை பட்டா கேட்டு ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, டிச.26- பெருந்தண்டலம் ஊராட்சியில் 50 ஆண்டு களுக்கு மேலாக வாழ்ந்து வரும் ஆதிதிராவிடர் மக்களுக்கு பட்டா வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் வட்டத்திற் குட்பட்ட பெருந்தண்டலம் கிராமத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆதிதிராவிட மக்கள்  50 ஆண்டுகளுக்கு மேலாக  வசித்து வருகின்ற னர்.  இவர்களுக்கு இதுவரை குடிமனை பட்டா மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படா மல் உள்ளது. பட்டா இல்லாத தால் அரசு வழங்கும் பசுமை வீடுகள், இந்திராகாந்தி குடி யிருப்புத் திட்டம், தனிநபர் கழிப்பறைகள்,  உள்ளிட்ட நலத்திட்டங்களைப் பெற முடியாமல் தவித்து வருகின்றனர். இந்நிலையில் குடிமனை பட்டா வழங்கிட வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் சார்பில் வியாழனன்று (டிச. 26) திருப்போரூர் பேருந்து நிலையத்திலிருந்து பேரணி யாகச்  சென்று வட்டாட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் வட்டச் செய லாளர் இ.அரிகிருஷ்ணன் தலைமை தாங்கினார். விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.கோவிந்தன், மாவட்டச் செயலாளர் பி.சண்முகம், மாவட்ட துணைச் செயலாளர் எம்.செல்வம், மாவட்டக்குழு உறுப்பினர் பி.அன்பரசு, வட்டத் தலைவர் பொன்ன ப்பன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.முன்னதாக சங்க நிர்வாகிகள் வட்டாட்சி யரை சந்தித்து கோரிக்கை மனுக்களை வழங்கினர். 

;