tamilnadu

img

செங்கல்பட்டு நகராட்சியில் துப்புரவு தொழிலாளர்கள் குப்பைகளை கைகளால் அள்ளும் அவலம்

செங்கல்பட்டு, பிப்.17- செங்கல்பட்டு நகராட்சி பகுதி களில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளதால் சாலையில் கொட்டப்படும் குப்பை களை துப்புரவுத் தொழிலாளர்கள் கைகளால் அள்ளி   தானியங்கிக் குப்பை வண்டியில் ஏற்றிச் செல்லும் அவல நிலைக்கு தள்ளப்பட்டுள்ள னர். செங்கல்பட்டு நகராட்சி 33 வார்டுகளை கொண்டது. தென் மாவட்டங்களிலிருந்து வருபவர்க ளுக்குச் சென்னையின் நுழைவுவாயி லாக செங்கல்பட்டு நகராட்சி திகழ்கிறது. இதனால்  மக்கள் தொகை அதிகரித்து வருகிறது. காஞ்சிபுரம் மாவட்டம் பிரித்ததை தொடர்ந்து, செங்கல்பட்டு மாவட்டத்தின் தலை நகராகவும் இந்த நகராட்சி உள்ளது. 2018 ஆம் ஆண்டு ரூ.35 லட்சம் மதிப்பில், தானியங்கிக் குப்பை லாரியும், 44 குப்பைத் தொட்டிகளும் இந்த நகராட்சிக்கு வாங்கப்பட்டது.  இந்த குப்பைத் தொட்டிகளை வார்டு வாரியாக தெருக்களில் பொது மக்கள் குப்பைகளை கொட்ட நகராட்சி சார்பில் வைக்கப்பட்டது. இதில் குப்பைகளை பொதுமக்கள் கொட்டி வந்தனர். இவற்றை தானியங்கிக் குப்பை லாரியின் மூலம் துப்புரவுத் தொழிலாளர்கள் அகற்றி வந்தனர். தற்போது நகரப் பகுதிகளில் வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி கள் திடீரென அகற்றப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் சாலையில் குப்பைகளை கொட்டுவதால் மலை போல் குப்பை தேங்கி கிடக்கிறது. இதனைத் தொடர்ந்து சாலையில் இருக்கும் குப்பைகளை துப்புரவுத் தொழிலாளர்கள் எவ்வித பாது காப்பும் இன்றி கையால் எடுத்து தானியங்கி வண்டியில் கொட்டி எடுத்துச் செல்கிறார்கள்.  குப்பைத் தொட்டிகளை அகற்றிய தற்கும்,  துப்புரவுத் தொழிலாளர் களை வைத்துகைகளால் குப்பை களை அள்ளுவதற்கு  பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து செங்கல்பட்டு  நகராட்சி ஆணையரிடம் கேட்ட போது,‘மாவட்டத்தின் தலைநகர மாகச் செங்கல்பட்டு மாறியிருப்ப தால் குப்பைத் தொட்டியில்லா நகர மாக மாற்ற வேண்டும் என மாவட்ட ஆட்சியர் வலியுறுத்தியுள்ளார். இதனால் குப்பைத் தொட்டிகள் அகற்றப்பட்டுள்ளது. மேலும் 28 பேட்டரியால் இயங்கும் சிறிய ரக வாகனங்கள், 6 குட்டியானை, 2 டிராக்டர்கள், 2 லாரிககள் மூலம் வீடு வீடாகச் சென்று  நகராட்சி ஊழியர்கள் குப்பைகளைப் பெற்றுவருகின்றனர். வாகனங்கள் பற்றாக்குறை உள்ள தால் சாலையில் குப்பைகள் தேங்கி விடுகிறது. இதுவும் மிக விரைவில் சரிசெய்யப்படும்’. என்றார். இதுகுறித்து இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் செங்கல் பட்டு பகுதிச் செயலாளர் பரணிவர் மண் ‘2007 ஆம் ஆண்டு 24 பெட்டிகளு டன் ஒரு குப்பை லாரி வாங்கப்பட் டது. அந்த லாரி பயன்படுத்தப்படா மல் இன்றுவரை நகராட்சி அலுவல கத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதே போன்று சிறிய வகை ஆட் டோக்கள் குப்பை வண்டிக்காக வாங்கப்பட்டது. அந்த வாகனங்களும் பயன்படுத்தப்பட வில்லை.தற்போது ரூ. 28 லட்சத்தில் வாங்கப்பட்ட தானியங்கிக் குப்பை லாரியும் நிறுத்தப்பட இருப்பதாகத் தெரியவருகின்றது. குப்பைத் தொட்டி இல்லா நகரம் என்றால் துப்புரவுத் தொழிலாளர்களை அதிகப்படுத்த வேண்டும், அதை விட்டுவிட்டு நகரிலிருந்த குப்பைத் தொட்டிகளை அகற்றிவிட்டால் குப்பை இல்லா நகரமாக மாறி விடுமா.  நகரத்தை தூய்மையாக வைத்திட உரிய நடவடிக்கையை நகராட்சி நிர்வாகம் எடுக்க வேண்டும்’ என்றார்.

;