செங்கல்பட்டு,பிப்.12- செங்கல்பட்டு மாவட்டம் கடும்பாடி கிராம மாரியம்மன் கோவில் வளாகத்தில் புதனன்று (பிப்.12) குழந்தையின் அழுகை குரல் கேட்டுள்ளது. கிராம மக்கள் சிலர் அங்கு வந்து பார்த்தனர். அப்போது, பிறந்து ஒருமாத மாகும் ஆண் குழந்தை தனி யாக அழுது கொண்டி ருந்தது. கோவிலைச் சுற்றி தேடிபார்த்தும் அந்த குழந்தையின் பெற்றோர் கிடைக்கவில்லை. இதனைத் தொடர்ந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் காவல்துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து குழந் தையை மீட்டு செங்கல்பட்டு குழந்தைகள் நல காப்பக அலுவலர் கீதாஞ்சலியிடம் ஒப்படைத்தனர். குழந்தை யை விட்டுச் சென்றது யார் என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.