tamilnadu

img

பாஜக பொதுச்செயலாளரின் தில்லாலங்கடி நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் போட்டு ரூ.2.17 கோடி மோசடி?

மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்தைப் பயன்படுத்தி ரூ.2 கோடியே 17 லட்சம் பணமோசடி செய்ததாக பாஜக தேசிய பொதுச்செயலாளர் முரளிதரராவ் மீது தெலுங்கானா காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தைச் சேர்ந்தவர் நிலத்தரகர் மகிபால் ரெட்டி. இவருக்கு மத்தியவர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ‘பார்மா எக்ஸில்’ நிறுவனத்தின் தலைவர் பதவியை பெற்றுத்தருவதாக கூறி, பாஜக பொதுச்செயலாளர்

முரளிதர ராவ், ரூ. 2 கோடியே 17 லட்சம் லஞ்சம் வாங்கியதாக தெரிகிறது. ஆனால், சொன்னபடி முரளிதரராவ் நடந்து கொள்ளவில்லை. முன்னதாக, மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் பெயரில் தயாரிக்கப்பட்ட போலி நியமனக் கடிதம் ஒன்றையும் முரளிதரராவ் அளித்துள்ளார். இதுபற்றியெல்லாம் கேட்டபோது, மகிபால் ரெட்டி மற்றும் அவரது மனைவி பிரவர்ணா ரெட்டி ஆகியோரை முரளிதர ராவ் ஆள்வைத்தும் மிரட்டியுள்ளார். இதையடுத்து, முரளிதர ராவின் மோசடி குறித்து, மகிபால் ரெட்டியின் மனைவி பிரவர்ணா ரெட்டி சரூர்நகர் காவல் நிலையத்தில் துணிந்து புகார் அளித்தார். அதனடிப்படையில், முரளிதரராவ் மற்றும் அவருடன் சேர்ந்த 8 பேர் மீது, சிஆர்பிசி 406, 420, 468, 471,506, 120-பி, 156 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

;