tamilnadu

img

இயல்பு நிலை திரும்பிவிட்டால் எதற்காக 9 லட்சம் வீரர்கள்?

ஸ்ரீநகர்:
மத்திய அரசு கூறுவது போல, ஜம்மு - காஷ்மீரில் இயல்புநிலை திரும்பி விட்டது என்றால், 9 லட்சம் வீரர்களை இன்னும் எதற்காக குவித்து வைக்கப்பட்டு இருக்கிறார்கள்? என்று, காஷ்மீர் முன்னாள் முதல்வரும், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவருமான மெகபூபா முப்தி கேள்வி எழுப்பியுள்ளார்.இதுதொடர்பாக, டுவிட்டர் பக்கத்தில் மேலும் அவர் கூறியிருப்பதாவது:“காஷ்மீரில் இயல்பு நிலை திரும்பி விட்டதாக மத்திய பாஜக அரசு கூறுகிறது. அப்படியானால், எதற்காக 9 லட்சம் வீரர்கள் இன்னும் குவித்து வைக்கப்பட்டுள்ளனர்? பாகிஸ்தான் தாக்குதல் நடத்தக் கூடும் என்கிறார்கள். ஆனால், மக்கள் போராட்டங்களை தடுக்கவே ராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. எல்லையை பாதுகாப்பதற்கு பதில், மாற்றுக்கருத்து தெரிவிப்ப வர்களை ஒடுக்குவதற்கு ராணுவம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. வீரர்களின் தியாகங்களை பயன்படுத்தி வாக்குகளைப் பெறுவதே மத்திய பாஜக அரசின் நோக்கம். உண்மையில் காஷ்மீர் மக்களைப்பற்றி அவர்களுக்கு எந்தக் கவலையும் இல்லை இவ்வாறு மெகபூபா முப்தி பதிவிட்டுள்ளார்.

;