குடிநீர் பிரச்சினை: துரைமுருகன் எச்சரிக்கை
வேலூர், ஜூன் 15- வேலூர் மாவட்டத்தில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் துரைமுருகன் தலைமையில் திமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆட்சியரிடம் மனு அளித்த னர். திமுக பொருளாளரும், காட்பாடி எம்எல்ஏவுமான துரைமுருகன் தலைமையில் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் ஏ.பி.நந்தகுமார் (அணைக்கட்டு), ப.கார்த்திகேயன் (வேலூர்), ஆர்.காந்தி (ராணிப்பேட்டை), நல்லதம்பி (திருப்பத்தூர்), ஈஸ்வரப்பன் (ஆற்காடு), காத்தவராயன் (குடியாத்தம்) ஆகியோர் ஆட்சியர் எஸ்.ஏ.ராமனிடம் மனு அளித்தனர். பின்னர், செய்தியாளர்களிடம் துரைமுருகன் கூறிய தாவது: “நடந்து முடிந்த தேர்தலில் வெற்றி பெற்ற திமுக எம்.பி.க்கள், எம்எல்ஏக்கள் நன்றி தெரிவிக்க தொகுதிக்குள் சென்றால் மக்கள் முதலில் வைக்கும் கோரிக்கை குடிநீர் பிரச்னையாகத்தான் உள்ளது. எனது 50 ஆண்டுகால அரசியல் வாழ்க்கையில் இப்படிப்பட்ட மோசமான குடிநீர் தட்டுப்பாட்டை இப்போதுதான் பார்க்கிறேன். பாலாற்றில் மணல் சுரண்டல் தொடர்கிறது. குடிநீர் பிரச்னையைப் போக்கா விடில் மக்களிடையே கிளர்ச்சி உருவாகும். குடிநீர் பிரச்னையைப் போக்க அனைத்து விதமான நடவடிக்கையும் எடுப்பதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். அவர் நடவடிக்கை எடுக்காவிடில் அடுத்தமுறை மனுக் கொடுக்க மாட்டோம். மக்களைத் திரட்டி போராடுவோம் என்றார்.
ராதமணி உடலுக்கு சிபிஎம் தலைவர்கள் அஞ்சலி
விழுப்புரம், ஜூன் 15- விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே கலிஞ்சிகுப்பத்தை சேர்ந்தவர் கு.ராதாமணி. விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த அவர், உடல்நலக் குறைவால் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) காலமானார். அவரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விழுப்புரம் வடக்கு மாவட்டச் செயலாளர் என்.சுப்பர மணியன், நிர்வாகக்குழு உறுப்பினர் எஸ்.முத்துகுமரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் புருஷோத்தமன், வீரமணி, வட்டச் செயலாளர் ஆர்.கண்ணப்பன் உட்பட பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.