tamilnadu

தேர்தல் பார்வையாளர்களிடம் புகார் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிப்பு

வேலூர், ஜூலை 21- வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி, நிய மிக்கப்பட்டுள்ள தேர்தல் பார்வையாளர்களிடம் அரசி யல் கட்சியினர், பொது மக்கள் தேர்தல் தொடர்பான புகார்களைத் தெரிவிக்க தொலைபேசி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.  இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்  குறிப்பில், வேலூர் மக்கள வைத் தேர்தலையொட்டி நியமிக்கப்பட்டுள்ள தேர்தல் பொதுப் பார்வையாளர் சுதம்காதேபந்திநாத் - 83000 30522, தேர்தல் காவல் பார்வையாளர்-ஆதித்யாகுமார் - 83000 30524,  தேர்தல் செலவினப் பார்வை யாளர்கள் வினய்குமார் - 83000 30526, ஆர்.ஆர்.என்.சுக்லா - 83000 30527 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம். மேலும், தேர்தல் பொதுப்  பார்வையாளர் சுதம்காதே பந்திநாத் வேலூர் சுற்றுலா  மாளிகை அறை எண் 4,  தேர்தல் காவல் பார்வையா ளர் ஆதித்யாகுமார் அறை எண் 2, தேர்தல் செலவினப் பார்வையாளர்கள் வினய் குமார் வேலூர் வனத்துறை விருந்தினர் மாளிகை அறை எண் 2, ஆர்.ஆர்.என். சுக்லா  அறை எண் 4இல் இருந்து தினமும் காலை 10 மணி முதல் இரவு 11 மணி வரை  அரசியல் கட்சியினர், பொது மக்களிடம் இருந்து நேரில் புகார் மனுக்களைப் பெற உள்ளனர். இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.