tamilnadu

img

ராணிப்பேட்டையில் ஜெகத்ரட்சகன் பிரச்சாரம்

வேலூர், ஏப்.7-

அரக்கோணம் மக்களவை தொகுதி மதச் சார் பற்ற முற்போக்கு கூட்டணி திமுக வேட்பாளர் எஸ்.ஜெகத்ரட்சகன் ராணிப் பேட்டை நகராட்சியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். நேரு நகர், காரை, பிஞ்சி, சீனிவாசன் பேட்டை,மாந்தாங்கல், ஆசிரியர் காலணி, நவல்பூர் உள்ளிட்ட அனைத்துப் பகுதிகளிலும் வாக்குகள் கோரினார்.வேட்பாளருடன் ராணிப் பேட்டை தொகுதி எம்எல்ஏ ஆர்.காந்தி, நகரமன்ற முன்னாள் தலைவர் குட்டி என்ற கிருஷ்ணமூர்த்தி, தொகுதி சிபிஎம் பொறுப்பாளர் தா.வெங்கடேசன், நகரத் தலைவர் மணிகண்டன், காங்கிரஸ் நகரத்தலைவர் அண்ணாதுரை, துணைத் தலைவர் பிஞ்சி மோகன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் கொண்ட சார்லஸ், மற்றும் சிபிஐ கட்சி நிர்வாகிகள், மதிமுக கட்சி நிர்வாகிகள் உள் ளிட்ட ஏராளமான கட்சி நிர்வாகிகள் வாக்கு சேகரித்தனர்.

;