tamilnadu

ரயில் தண்டவாளத்தை கடந்தால் ரூ.1000 அபராதம்

வேலூர், மே 7-ரயில்வே தண்டவாளத்தை கடந்தால் ரூ. 1,000 அபராதமும் சிறை தண்டனையும் விதிக்கப்படும் என, ரயில்வே பாதுகாப்பு படையினர் அறிவித்து வருகின்றனர். வேலூர் மாவட்டம், ஆம்பூர் ரயில்வே நிலையத்தில் ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற மூன்று பேர் ரயில் மோதி பலியாகினர். இந்த சம்பவம் அதிர்ச்சி அளித்தாலும், ஜோலார் பேட்டையிலிருந்து அரக் கோணம் வரையுள்ள ரயில்வே தண்டவாளங் களை கடந்து சென்போது ரயில் மோதி தினமும் பலியானவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.இதுபோன்ற சம்பவங்களை தடுக்க, ரயில்வே பாதுகாப்பு படை காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இது குறித்து அவர்கள், அரக்கோணம் முதல் ஜோலார்பேட்டை வரையிலான, அனைத்து ரயில்வே நிலையங்களிலுள்ள ஒலி பெருக்கியில் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார்கள்.அதில், ரயில்வே தண்டவாளத்தை கடக்கக்கூடாது. ஓடும் ரயில்களில் ஏறக் கூடாது. பிளாட்பாரங்களுக்கு செல்ல, நடை மேடைகளை பயன்படுத்த வேண்டும். ரயில்வே பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மற்றும் ரயில் தண்டவாளத்தை கடந்தால் ரூ. 1,000 அபராதம் மற்றும் குற்ற நடவடிக்கைகளுக்கு ஏற்ப, சிறை தண்டனை அல்லது இரண்டும் சேர்த்து விதிக்கப்படும்.இவ்வாறு கூறப்பட்டது.

;