வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வேலூர் சத்துவாச்சாரி, அலமேலு மங்காபுரம் வள்ளலார் ஆர்டிஓ சாலை, காகிதப்பட்டறை சைதாப்பேட்டை முருகன் கோவில் சார்பனா மேடு ஆகிய பகுதிகளில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இதில் தொகுதி தேர்தல் பொறுப்பாளர் க.பொன்முடி, வேலூர் மாநகரச் செயலாளர் ப.கார்த்திகேயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
***********
வேலூர் மக்களவை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் கதிர் ஆனந்த்துக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாணியம்பாடி தொகுதியில் வாக்கு சேகரிப்பு நடைபெற்றது. இதில் சிபிஎம் வாணியம்பாடி தேர்தல் பொறுப்பாளர் இந்துமதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.