ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஓய்வூதியம் மாதம் ரூ. 6000 வழங்க வேண்டும், கடந்த மே மாதம் ஊதிய ஒப்பந்தம் முடிவுற்ற நிலையில் புதிய ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை துவக்கி அரசும் தொழிலாளர் நலத்துறை அமைச்சரும் உடனடியாக முடிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி வேலூர் மாவட்ட பீடித் தொழிலாளர் சங்கம் சார்பில் மாவட்டத் தலை வர் பி.காத்தவராயன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு பீடி தொழிலா ளர் சம்மேளனத் தலைவர் எம்.பி.ராமச்சந்தி ரன், மாநில பொதுச் செயலாளர் கே.திருச் செல்வன் சிஐடியு மாவட்டச் செயலாளர் எஸ்.பரசுராமன், மாவட்ட துணைத் தலைவர் என்.காசிநாதன், பீடித் தொழிலாளர் சங்க மாவட்டச் செயலாளர் வி.நாகேந்திரன் துணச் செயலாளர் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.