வேலூர், செப்.17-வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த செருவங்கி கிராமத்தைச் சேர்ந்த செந்தமிழ் சரவணன், பூங்குழலி தம்பதியரின் இரண்டாவது மகள் யாழிணி. மேற்காசிய சதுரங்கப் போட்டியில் தங்கம் வென்று நாடு திரும்பிய தங்க மங்கை யாழிணிக்கு குடியாத்தம் அடுத்த செருவங்கி நகராட்சி பள்ளியில் நடந்த பாராட்டு விழாவில் “உலகத்தர பயிற்சிக்கான சதுரங்க மென்பொருள்கள்” வழங்கி கவுரவித்தனர். குடியாத்தம் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் காத்தவராயன் தலைமை வகித்தார். செந்தமிழ் சரவணன் வரவேற்றார்.ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ஏகாம்பரம், ஓய்வு பெற்ற துணை ஆட்சியர் கணேசன், வங்கி மேலாளர் சிவமணி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா செயலாளர் கே.சாமிநாதன், காத்தவராயன், செல்வம், சமூக ஆர்வலர்கள், ஏராளமான பொதுமக்கள் பங்கேற்று செந்தமிழ் யாழிணியை பாராட்டினர்.