tamilnadu

img

விஐடியில் 3 நாள் சர்வதேச கருத்தரங்கம்

வேலூர், ஜன.6-  விஐடியில் வினையூக்கி களின் தற்கால வளர்ச்சிகள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கை நோபல் பரிசு பெற்ற பேராசிரியர் ராபர்ட் எச். கிரிப்ஸ் துவக்கி வைத்தார். விஐடியின், அறிவியல் பள்ளி மற்றும் இங்கிலாந்தின் ராயல் சொசைட்டி (வேதியி யல் )  சார்பில் வினையூக்கி களின் தற்கால வளர்ச்சிகள் குறித்த 3 நாள் சர்வதேச கருத்தரங்கம் நடைபெறு கிறது. இந்த கருத்தரங்கை  அமெரிக்காவின் கலி போர்னியா தொழில்நுட்ப மையத்தின் பேராசிரியரும், நோபல் பரிசு பெற்ற ராபர்ட் எச்.கிரிப்ஸ்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு  கருத்தரங்கை துவக்கிவைத்தார். பின்னர் அவர் பேசுகை யில், ‘அடிப்படை அறிவி யலை நாம் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும், அத்தகைய அறிவியலை பயனுள்ளதாக பயன்படுத்த வேண்டும். இந்த நூற்றாண் டில் வினையூக்கிகள் பிரிவில் பலருக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார். விஐடி வேந்தர் டாக்டர் கோ. விசுவநாதன் தலைமை தாங்கினார். உதவி துணைத் தலைவர் காதம்பரி விசுவ நாதன், துணைத்தலைவர் சங்கர் விசுவநாதன், இங்கிலாந்தின் சவுத்ஆம்டன் பல்கலைக்கழக பேராசிரி யர் டொமினிக் டில்டெஸ்லி, அமெரிக்க பேராசிரியர் டாக்டர். தாமஸ் கொலா காட், விஐடி இணை துணை வேந்தர் டாக்டர்.எஸ்.நாராய ணன், பதிவாளர் டாக்டர்.கே.சத்திய நாராயணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.  முன்னதாக விஐடியின், முன்னேற்றப்பட்ட அறிவி யல் பள்ளித்  தலைவர் மேரி சாரல் கருத்தரங்கின் நோக்கத்தை விரிவாக எடுத்து கூறினார்.

;