tamilnadu

img

ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் இறப்பு விகிதம் அதிகம்: ஆய்வில் தகவல்

வாஷிங்டன்
அமெரிக்காவில் உள்ள படைவீரர் சுகாதார நிர்வாக மருத்துவ மையங்களில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு மலேரியா எதிர்ப்பு மருந்து ஹைட்ராக்ஸி குளோரோகுயினால் எந்த நன்மையும் காட்டவில்லை என்று ஒரு ஆய்வு தெரிவிக்கிறது.

உண்மையில், ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் சிகிச்சையளிக்கப்பட்டதில் மரணத்திற்கான ஆபத்து அதிகமாக இருப்பதைக் கண்டறிந்துள்ளனர். சோதனை முயற்சியாக ஏப்ரல் 11 ஆம் தேதி வரை அனைத்து அமெரிக்க படைவீரர் சுகாதார நிர்வாக மருத்துவ மையங்களிலும் உறுதிப்படுத்தப்பட்ட “சார்ஸ் கோவிட்-2” நோய்த்தொற்றுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நோயாளிகளிடம் ஆய்வு ஒன்றை ஆராய்ச்சியாளர்கள் மேற்கொண்டனர். சிலருக்கு ஹைட்ராக்ஸி குளோரோ குயின் மாத்திரைகளை மட்டும் அளித்துள்ளனர். சிலருக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினுடன் அஜித்ரோமைசின் (ஆண்டிபாயாடிக்) என்ற மருந்தையும் சேர்த்து கொடுத்துள்ளனர்.

மொத்தம் 368 நோயாளிகளிடம் நடத்தப்பட்ட ஆய்வில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மட்டும் சாப்பிட்டவர்களின் இறப்பு விகிதம் 27.8 சதவீதமாகவும் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மற்றும் அஜித்ரோமைசின் சாப்பிட்டவர்களின் இறப்பு விகிதம் 22.1 சதவீதமாக இருந்துள்ளது.ஹைட்ராக்ஸி குளோரோகுயின் ஒரு சுவாச இயந்திரத்தின் (வெண்டிலேட்டர்கள்) தேவையிலும் எந்த வித்தியாசத்தையும் ஏற்படுத்தவில்லை.
கொரோனா நோயாளிகளுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயின் பயன்பாடு குறித்து வரையறுக்கப்பட்ட மற்றும் முரண்பட்ட தகவல்கள் உள்ளபோதும், மருத்துவ பரிசோதனை கிடைக்காத நிலையில் ஹைட்ராக்ஸி குளோரோகுயின் மருந்தை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அங்கீகாரம் வழங்கியுள்ளது.
 

;