திருவண்ணாமலையில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு உட்பட்ட 12 மண்டல அலுவலகங்கள் முன்பு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், சிபிஎம் ஒன்றியச் செயலாளர் ராமதாஸ், சங்க நிர்வாகிகள் ஜி.பன்னீர், பெ.அரிதாசு, உள்பட பலர் கலந்து கொண்டனர். கடலூர் மாவட்டத்தில் 19 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நெல்லிக்குப்பம் இஐடி பாரி ஆலை முன்பு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் செயலாளர் தென்னரசு தலைமையிலும், நெல்லிக்குப்பம் டிவிஷன் அலுவலகம் முன்பு சம்பத் தலைமையிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.மாதவன், பகுதிச் செயலாளர் ராமானுஜம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் சென்னை சுகர்ஸ் சர்க்கரை ஆலை முன்பு மாவட்டத் தலைவர் வி.ரகுராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உளுந்தூர்பேட்டை செங்கல்ராயன் கூட்டுறவு சர்க்கரை ஆலை முன்பு மாநிலச் செயலாளர் எஸ். ஜோதிராமன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.