திருவள்ளூர் மாவட்டத்தில் கிராம சிறு, குறு விவசா யிகள் குழுவாக சேர்ந்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் நகருக்கு சென்று சாமந்திப்பூ நாற்று ஒன்றை 3 ரூபாய்க்கு 4 ஆயிரம் செடிகள் கொள்முதல் செய்து தலா 50 செண்டு நிலத்தில் நடவு செய்தனர்.
பூச் செடி சாகுபடி செய்ய நிலத்தில் இயற்கை உரம் இட்டு பன்படுத்தி,மஞ்ஜி கட்டி தாயார் நிலையில் வைக்க வேண்டும். இப்படி தயாரிப்பு வேலைகள் செய்து நடவு செய்த பிறகு 30 நாட்களில் பூக்கள் பூக்க தொடங்கியது. இதன் ஆயுள் காலமே 3 மாதம் தான். இந்த காலங்களில் ஏறக்குறைய நான்கு முறை பூக்களை பறித்து விற்பனை செய்தால்தான் வருவாயை ஈட்ட முடியும்.
ஆனால், அரசின் இந்த ஊரடங்கு உத்தரவால் முதலுக்கு மோசம் என்பது போல பூத்து குலுங்கும் பூக்களை பறிக்க முடியாமல் கண்ணெதிரே அழிந்து வருவத்தை கண்டு விவசாயிகளின் மனம் வாடுகின்றனர்.
களைகள் எடுத்து, உரம், நீர்பாசனம், பூ பறிப்பவர்க ளுக்கு கூலி என ஒவ்வொரு செடிகளையும் கண்மணி போல வளர்த்து,ஏக்கருக்கு ரூ.50 ஆயிரம் வரை செலவு செய்தனர். தற்போதைய நிலையில் முதலுக்கு கூட வழியில்லை. கடன் தான் மிஞ்சியுள்ளது என கவரைப்பேட்டை அருகில் உள்ள திருப்பேடு கோவிந்தராஜ், மேல் முதலம்பேடு ஏழுமலை, ஜோதி, குப்பன் ஆகியோர் வேதனையை வெளிப்படுத் தினர்.
கும்மிடிப்பூண்டி, ஊத்துக் கோட்டை, பொன்னேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலத்தில் சாமந்திப்பூ விளைச்சல் அமோகமாக பயிரிடப்படும், அதனை பறித்து பலன் அடையும் நேரத்தில் எதிர்பாராத விதமாக கொரோனா வைரஸ் தொற்றால் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்தால் ரயில் மற்றும் பேருந்துகள் முடக்கப்பட்டது.
கடைகள் மூடப்பட்டதால் ஆட்கள் நடமாட்டமும் இல்லை. இதனால் பூக்களை பறிக்காமலேயே நிலத்தில் அழியும் நிலையில் உள்ளதால் விவசாயிகள் சோகத்தில் உள்ளனர். உழைப்பை செலுத்தி விளைவித்த பூக்களும் செடிகளிலேயே வாடுகிறது. கடனேடு கண்ணீரில் வடிக்கின்றனர். விவசாயிகள்.
பெ.ரூபன்
படம் போடவும்