ஏப்.25 மாநிலம் முழுவதும் விவசாயிகளின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம்
விவசாயிகள் சங்கம் அறிவிப்பு
சென்னை,ஏப்.22- உணவுப் பொருட்கள் தட்டுப்பாடி ன்றி கிடைக்க விவசாயப் பணிகள் தொடர்ந்து நடைபெற மத்திய- மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கக் கோரி ஏப்ரல் 25 அன்று மாநிலம் முழுவதும் விவசாயிகளின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அறிவித்துள்ளது. இதுகுறித்து விவசாயிகள் சங்கத்தின் மாநிலப் பொதுச்செ யலாளர் பெ.சண்முகம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிரு ப்பதாவது: கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் பரவிக் கொண்டி ருக்கிறது.
இதனால் மக்கள் வீடுகளில் நீண்ட நாட்க ளுக்கு முடங்கியிருக்க வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாக்க ப்பட்டு ள்ளனர். அதே நேரத்தில் மக்கள் பட்டினியில் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு மத்திய – மாநில அரசு களுக்கு உள்ளது. உணவுப் பொரு ட்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க விவசாயப் பணிகள் தொடர்ந்து நடைபெற வேண்டியுள்ளது. இதற்கு உதவிடும் வகையில் மத்திய- மாநில அரசுகள் கீழ்க்கண்ட கோரிக்கைகளை நிறை வேற்ற கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயிகள் அவரவர் இல்லங்களில் கருப்புக் கொடி ஏற்றி வலியுறுத்துவது என்று தீர்மானிக்க ப்பட்டுள்ளது.
ஏப்ரல் 25 அன்று காலை 10 மணிக்கு மாநிலம் முழுவதும் லட்சக்கணக்கான விவசாயிகளின் வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றப்படும். மத்திய- மாநில அரசுகள் விவசாயிகளையும், விவசாயத்தையும் பாதுகாக்கத் தக்க வகையில் கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வர வேண்டும்.
கொரோனா நிவாரணப் பணிகளு க்காக தமிழக அரசு கோரிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும். உயர்நீதிமன்ற உத்தரவுப்படி சிறு- குறு விவசாயி களுக்கு தலா 10 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்க வேண்டும். அனைத்து விவசாயக் கடன் வசூலையும் ஒரு வருடத்திற்கு தள்ளி வைக்க வேண்டும். நூறுநாள் வேலைத் திட்டத்தை விவசாயப் பணிகளுக்குப் பயன்படுத்திட உத்தரவிட வேண்டும். ஊரடங்கால் பழங்கள், பூ உட்பட வேளாண் விளை பொருட்கள் அழிந்து பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு விரோதமான திட்டங்களை செயல்படுத்தக்கூடாது. ஏழை குடும்பங்கள் அனைத்திற்கும் ரேசன் பொருட்களை இலவசமாக வழங்குவதுடன், தலா ரூ.5000 உதவித்தொகை வழங்க வேண்டும். மாநிலம் முழுவதும் கிருமிநாசினி தெளிப்பதுடன், கொரோனா நோய் பாதிப்புள்ள மாவட்டங்களில் அனைவருக்கும் நோய்த் தொற்று பரிசோதனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்க ப்பட்டுள்ளது.