tamilnadu

img

ரேபிடோ - பைக் டாக்சியை தடை செய்க... சட்டமன்றம் நோக்கி ஆட்டோ தொழிலாளர்கள் பேரணி

விருதுநகர்:
தமிழகத்தில் உள்ள பெருநகரங்களில்  ரேபிடோ எனப்படும்பைக் டாக்சி முறை எவ்வித அறிவிப்புமின்றி அமல்படுத்தப்பட்டு வருகிறது. இதனால்,  கோடிக்கணக்கான ஆட்டோ தொழிலாளர் களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி வருகிறது. மேலும், இவ்விதபைக்கில் பயணம் செய்யும் போதுவிபத்து ஏற்பட்டால், பயணிகளுக் கும் அவரது குடும்பத்தாருக்கும் எவ்வித இழப்பீட்டுத் தொகையும் கிடைக்காது. எனவே, அனுமதியின்றியும், பயணிகளின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும்  ரேபிடோ-பைக் டாக்சி முறையைரத்து செய்யக் கோரி போக்குவரத்து மானியக் கோரிக்கை நடைபெறும் நாளில் சட்டமன்றத்தை ஆட்டோக்களுடன் முற்றுகையிடும்போராட்டம் நடத்தப்படும் என்று விருதுநகரில் நடைபெற்ற சிஐடியு- தமிழ்நாடு ஆட்டோ தொழிலாளர்  சம்மேளன மாநிலக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. 

விருதுநகர் எம்.ஆர்.வி. நினைவகத்தில் ஆட்டோ தொழிலாளர் சம்மேளனத்தின் மாநிலக்குழு கூட்டம் மார்ச்  14,15 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இக்கூட்டத் திற்கு சம்மேளனத் தலைவர் வி.குமார் தலைமை தாங்கினார். மாநிலப் பொதுச் செயலாளர் எம்.சிவாஜி, சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன் மற்றும்  மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டனர். சர்வதேச சந்தையில் கச்சாஎண்ணெய் விலை கடும் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆனால், மத்தியஅரசானது, டீசல், பெட்ரோல் விலையை குறைக்காமல், விற்பனை வரியை உயர்த்தியுள்ளது. இதனால், ஆட்டோ தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, விலையை குறைக்காமல் வரியை உயர்த்திய மத்திய அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் போஸ்டர் இயக்கம் நடத்துவது என்றும் ரேபிடோ, பைக்டாச்சி முறையை ரத்து செய்யக்கோரி போக்குவரத்து மானியக்கோரிக்கை நாளில் ஆட்டோக்களுடன் சட்டமன்றத்தை முற்றுகையிடுவது என்றும் ஏப்ரல் 1 அன்று முறைசாரா தொழிலாளர் சங்கம் சார்பில் நடைபெறும் போராட்டத்தில் ஆட்டோ தொழிலாளர்கள் திரளாக பங்கேற்று போராட்டத்தை வெற்றி பெறச் செய்வது என்றும் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

;