tamilnadu

வெளிமாநில தொழிலாளர்களை சொந்த மாநிலத்திற்கு அனுப்ப வேண்டும்: சிஐடியு

கடலூர், மே 14 - நெய்வேலியில் உள்ள வெளிமாநில தொழிலாளர்களைப் சொந்த மாநி லத்துக்கு அனுப்பி வைக்க மாவட்ட ஆட்சித்  தலைவர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சிஐடியு வலியுறுத்தி உள்ளது. இது தொடர்பாக சிஐடியு மாவட்ட செய லாளர் பி.கருப்பையன் ஆட்சியருக்கு  அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:  நெய்வேலி என்எல்சியில் சுமார் 500  வெளிமாநில தொழிலாளர்கள் பவர் மேக்  என்கிற அவுட்சோர்சிங் கம்பெனியின் மூலம்  புதுத்தெர்மல் கட்டுமான பணியில் ஈடுபட்டு வந்தனர். இவர்களின் பணி முடிந்து சொந்த  ஊருக்கு செல்ல தயாரானபோது ஊரடங்கு  அமுல்படுத்தப்பட்டது. ஆகவே, அவர்களால்  சொந்த ஊருக்கு செல்ல முடியவில்லை. அந்தத் தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரி என்எல்சி நிர்வாகத்திடமும், வட்ட நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டுள்ளனர். சம்பள மும் இன்றி உள்ளனர். எனவே தொழிலா ளர்கள் வியாழனன்று (மே 14) சொந்த மாநி லத்திற்கு நடந்தே செல்ல முயன்றபோது காவல்துறையினர் அவர்களை தடுத்து நிறுத்தி வைத்துள்ளனர். இந்தப் பிரச்சனையில் மாவட்ட ஆட்சி யர் தலையிட்டு அந்த தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலத்திற்கு அனுப்பி  வைக்கவும், சம்பளத்தை பெற்று தரவும் உரிய நடவடிக்கை எடுக்கம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

;