செம்போடை, ஜன.23- வேதாரண்யத்தை அடுத்த செம்போடை ருக்மணி வரதராஜன் பொறியியல் கல்லூரி மற்றும் R.V. பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக மகளிர் பாதுகாப்பு விழிப்புணர்வு விழா நடைபெற்றது. விழாவிற்கு செம் போடை ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் நிறு வனர் டாக்டர் வரதராஜன் தலைமை வகித்தார். ஆர்.வி. கல்வி நிறுவனங்களின் செயலர் செந்தில் முன்னிலை வகித்தார். பொறியியல் கல்லூரி முதல்வர் டாக்டர் செந்தில்வேலன் வரவேற்புரை நிகழ்த்தினார். வேதாரண்யம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் செல்வி வெர்ஜினியா, காவலன் செயலியை அறிமுகப்படுத்தி விளக்கினார். ஆர்.வி. கல்வி நிறுவனங்க ளின் நிர்வாக அலுவலர் கோவிந்தராஜூ, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் பக்கிரி சாமி சிறப்புரை ஆற்றினார்கள். பாலி டெக்னிக் கல்லூரி முதல்வர் யோகானந்த் நன்றியுரையாற்றினார். விழாவில் திரளான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.