tamilnadu

இ-சேவை மையம் திறக்கப்படுமா?

விழுப்புரம், மே 30- விழுப்புரம் மாவட்டத்தில் 500க்கும் மேற்பட்ட ஊராட்சிகள் உள்  ளன. இந்த ஊராட்சிகளில் வசிக்கும் மக்கள் பல்வேறு சான்றிதழ்களை பெற, ஆன்லைன் மூலம் பதிவு செய்ய  ஒவ்வொரு ஊராட்சிகளிலும் 14 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் இ-சேவை மையம் அமைக்கப்பட்டன. விக்கிரவாண்டி வட்டத்திற்கு உட்பட்ட வி.சாத்தனூர் ஊராட்சியில் அமைக்கப்பட்ட பொது இ-சேவை மையம் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரராமல் பூட்டியே கிடக்கிறது. இதனால் அந்த மையம் பாழ டைந்து மக்களின் வரிப்பணம் வீணா கிறது. மாவட்ட நிர்வாகம்  பூட்டிக் கிடக்கும் பொது இ-சேவை மையத்தை திறந்து மக்கள் பயன் பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.