tamilnadu

img

ரூ.19 கோடி வழங்காத ஆலையில் காத்திருக்கும் கரும்பு விவசாயிகள்

விழுப்புரம்.ஆக.29- விழுப்புரம் மாவட்டம் செஞ்சி ராஜஸ்ஸ்ரீ சர்க்கரை ஆலைக்கு கடந்த 8 மாதங்களாக கரும்பு அனுப்பிய விவசாயிகளை ஏமாற்றா மல் உடனடியாக எப்.ஆர்.பி தொகை ரூ.19  கோடியை  வழங்க வேண்டும், 2013-2016 வரை  மாநில அரசு பரிந்துரை விலையை வழங்கா மல் உள்ள பாக்கி நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் காத்திருக்கும் போராட்டம் ஆலை  முன்பு மாநில துணைத் தலைவர் டி.ஆர். குண்டு ரெட்டியார் தலைமையில் துவங்கி யது. மாநிலக் குழு உறுப்பினர் கே.ஜெ.எம்.  தமிழரசன் போராட்டத்தை தொடங்கி வைத்தார். மாநில பொதுச் செயலாளர் டி. ரவீந்தரன், முன்னாள் எம்எல்ஏ ஆர்.ராம மூர்த்தி ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.டி. முருகன், மாவட்டக் குழு உறுப்பினர் கே.மாதவன், மாநிலக் குழு உறுப்பினர் ஆர்.வரதராஜன் உள்ளிட்ட பலர் உரையாற்றினர். ரூ.19 கோடி கரும்பு அறவை  பாக்கியை கரும்பு விவசாயிகளுக்கு ஆலை நிர்வாகம் வழங்கும் வரை செஞ்சி அருகே உள்ள செம்  மேடு ராஜஸ்ரீ சர்க்கரை ஆலை முன்பு காத்தி ருப்போம் என்று தலைவர்கள் தெரிவித்தனர்.

;