tamilnadu

img

அரசுப் பள்ளி கட்டடத்தை சீரமைக்கக் கோரி மாணவர்கள் போராட்டம்

சங்கராபுரம், ஆக. 24- விழுப்புரம் மாவட்டம் கொசப்பாடி கிராமத்தில் இடிந்து விழும்  நிலையில் படுமோசமாக சேத மடைந்துள்ள அரசு நடுநிலைப் பள்ளி கட்டடத்தை புதுப்பிக்கக் கோரி சங்கராபுரம் ஊராட்சி ஒன் றிய அலுவலகம் முன் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். வசைபாடி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்  பள்ளியில் 200க்கும் மேற்பட்ட  ஏழை மாணவர்கள் பயில்கின்ற னர். தலா இரண்டு அறைகள் கொண்ட இரண்டு கட்டடங்கள் மட்டுமே செயல்பாட்டில் உள்ளன. இரண்டு கட்டடங்கள் முற்றிலுமாக சேதமடைந்துள்ளன. இந்த பாழடைந்த கட்டிடத்தை  இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்டித்  தர வேண்டும் என சங்கராபுரம் உதவிக் கல்வி அலுவலர் மற்றும்  ஊராட்சி ஒன்றிய அலுவலர் ஆகி யோரிடம் மனு அளிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் ஆய்வு என  பெயரளவில் நடத்திவிட்டு மேல் நட வடிக்கை எதுவும் எடுக்கவில்லை இதனால் வாலிபர் சங்க கிளைத் தலைவர் பகத்சிங், மாண வர் சங்க கிளைத் தலைவர் கிஷன்சிங் ஆகியோர் தலைமை யில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விழுப்புரம் தெற்கு மாவட்டத் தலை வர் எம்.கே.பழனி, செயலாளர் வி. ஏழுமலை, மாணவர் சங்கத் தலை வர் ரிச்சர்ட்பிரபு, செயலாளர் கே.வி. ஸ்ரீபத் ஆகியோர் கோரிக்கை களை விளக்கிப் பேசினர். இதில் பொருளாளர் ஆர்.பூமாலை, ஆர்.வெங்கடேசன், கே. பாஸ்டர், பிரபாகரன், மகாலட்சுமி, வாசுகி, முரளி, ராஜ்குமார், முனு சாமி, காரல்மர்க்ஸ், வெற்றிவேல், முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

;