tamilnadu

img

பேராவூரணி முதன்மை சாலையை சீரமைக்காவிட்டால் போராட்டம்

வர்த்தகர் கழகம் அறிவிப்பு

தஞ்சாவூர், ஜன.10- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூர ணியில் உள்ள நீலகண்ட விநாயகர் ஆலயம் முதல் அண்ணாசிலை வரை யிலான சுமார் ஒன்றரை கி.மீ தூரம் உள்ள முதன்மைச் சாலையான இந்த சாலை பட்டுக்கோட்டையிலிருந்து அறந்தாங்கி செல்லும் முக்கியச் சாலையாகவும் உள்ளது. இந்தச் சாலையில் தான் பேருந்து நிலை யம், வங்கிகள், முக்கிய வர்த்தக நிறு வனங்கள் உள்ளன.  பேராவூரணிக்கு வரும் வாக னங்கள் இந்தச் சாலையை கடக்கா மல் எந்த பகுதிக்கும் செல்ல முடியாத  நிலை உள்ளது, அப்படிப்பட்ட இந்த சாலை முக்கியத்துவம் வாய்ந்த தாகும். இந்நிலையில் கடந்த 2 மாத  காலமாக பெய்த மழையில் சாலை  மிகவும் சேதமடைந்தது. இந்த சாலை  சேதமடைந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு அவ்வப்போது சில சில விபத்துகள் ஏற்பட்டன. சாலை  தெரியாமலும் பள்ளம் தெரியா மலும் வாகன ஓட்டிகள் மிகவும் சிர மப்பட்டு வாகனத்தை ஓட்டி வந்தனர்.

கடந்த 15 தினங்களுக்கு மேல்  பேராவூரணி பகுதியில் மழை  இல்லை, இந்த நேரத்தைப்  பயன்படுத்தி நெடுஞ்சாலைத்து றையினர் இந்த சாலையை விரை வில் சரி செய்திருக்கலாம், ஆனால் இன்றுவரை முழுமையாக சாலை சரி செய்யப்படவில்லை. ஏற்கனவே சாலை ஓரங்களில் கொட்டி வைத்த  கப்பி கற்களையும், தார் ஜல்லிகளை யும் கொண்டு ஒரு சில பள்ளங்களை மட்டும் சரி செய்துள்ளனர். ஆனால்  பேராவூரணி அரசு மருத்துவமனை யில் இருந்து தொடங்கி பொது ப்பணித்துறை அலுவலகம் அருகி லும், பேராவூரணி ரயில்வே நிலையம்  அருகிலும், பேராவூரணி ஸ்டேட் பாங்க் அருகிலும், பேராவூரணி பேருந்து நிலையம் செல்லும் அருகி லும், பேராவூரணி நீலகண்ட பிள்ளையார் கோவில் செல்லும் அரு கிலும் தார்ச்சாலை மிகவும் பள்ள மும் படுகுழியாகவும் காணப்படு கின்றன.  பேராவூரணி வர்த்தகர் கழக தலை வர் ஆர்.பி.ராஜேந்திரன், செயலா ளர் ஏ.டி.எஸ்.குமரேசன், பொருளா ளர் எஸ்.ஜகுபர்அலி ஆகியோர் நெடு ஞ்சாலைத்துறை அதிகாரியை சந்தி த்து மனு கொடுத்து, ஒரு மாதம் காலம் ஆகியும் அதிகாரிகள் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை, எனவே அதிகாரிகள் விரைந்து சாலையை சீரமைக்கவில்லை என்றால் வர்த்தகர்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனர்.  பொதுமக்களும், வர்த்தகர்க ளும் நெடுஞ்சாலைத் துறை அதிகா ரிகள் விரைவாக இந்த முதன்மை ச்சாலை மற்றும் சேதுசாலை, ஆவ ணம் சாலையை சரி செய்ய வேண்டு மென கேட்டுக் கொண்டுள்ளனர்.

;