tamilnadu

img

ஜன.8 பொது வேலை நிறுத்த ஆயத்த மாநாடு

உதகை, டிச. 15- உதகையில் உள்ள சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில் அகில  இந்திய வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சனியன்று நடைபெற்றது. மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளைக் கண்டித்து 2020  ஜனவரி 8 ல் நாடுதழுவிய அளவில்  பொதுவேலை நிறுத்தம் நடை பெறவுள்ளது. சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட அகில இந்திய மத்திய  தொழிற்சங்கங்கள் இணைந்து கூட்டாக நாடு தழுவிய பொது வேலை நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளனர். இதில் ஏராளமான தொழிலாளர்களை பங்கேற்க வைப்பதர்கான தயாரிப்பு  பணிகள் நாடு முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. நீலகிரி மாவட்டம், உதகையில் உள்ள சிஐடியு மாவட்ட குழு அலுவலகத்தில்  வேலை நிறுத்த ஆயத்த மாநாடு சிஐடியு மாவட்ட தலைவர் கே.சுந்தரம் தலைமையில் நடைபெற்றது. சிஐடியு மாநில செய லாளர் எஸ்.கிருஷ்ணமூர்த்தி‌  சிறப்புரை ஆற்றினார். மாவட்ட செயலாளர் ஆர்.ரமேஷ், டாஸ் மாக் ஊழியர் மாநில சம்மேளன துணை தலைவர் ஜெ.ஆல்தொரை ஆகியோர் நீலகிரி மாவட்ட தொழில் பாதிப்புகள் குறித்து பேசினர். இதில் பல்வேறு தொழிற்சங்கத்தை சேர்ந்த ஏராளமானோர் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் மத்திய, மாநில அரசுகளின் தொழி லாளர் விரோத கொள்கைகளைக் கண்டித்து டிசம்பர் 27 ல் மாவட் டத்தில் 4 மையங்களில் ஆர்ப் பாட்டம் நடத்துவது என்றும், மாவட்டத்தில் தொழில்வாரியாக சிறப்பு கருத்தரங்கம் நடத்துவது  என்பன உள்ளிட்ட பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.