விருதுநகர், ஜூன் 4- விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே உள்ள ரெங்கபாளையத்தை சேர்ந்த கணேசன் மகன் முருகேசன் (30) இவ ரது சகோதரி சித்ராவை (35) என்பவரை அதை ஊரைச் சேர்ந்த கார்த்திகை செல்வம் (எ) குயில் (40) என்பவருக்கு திரு மணம் செய்து கொடுத்துள்ளனர். தற் போது கருத்து வேறுபாட்டால் இரு வரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் புதன்கிழமை ரெங்க பாளையத்தில் உள்ள பிள்ளையார் கோவில் அருகில், முருகேசனுக்கும், கார்த்திகை செல்வனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த கார்த்திகை செல்வம் கத்தியால் முருகேசனை கத்தியால் குத்தி யுள்ளார். இதில் முருகேசன் சம்பவ இடத் திலேயே உயிரிழந்தார். வத்திராயிருப்பு காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.