விழுப்புரம், ஜூன் 21- விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட கப்பியாம்புலியூர் கிராமத்தில் குடிநீர், நூறு நாள் வேலை மற்றும் நிலுவைக் கூலி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் கிழக்கு ஒன்றியத் தலைவர் என்.குமார் தலைமையில் நடைபெற்றது. போராட்டத்தில் சங்கத்தின் நிர்வாகிகள் மாவட்டத் தலை வர் வி.அர்ச்சுணன், செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, பொருளா ளர் பி.உலகநாதன், ஒன்றியச் செயலாளர்கள் ஏ.தண்ட பாணி, ஆர்.தண்டபாணி ஆகியோர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். விக்கிரவாண்டி வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன், உதவி வட்டார வளர்ச்சி அலுவலர் அமுதவல்லி ஆகியோர் சங்க நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி நூறு நாள் வேலை உடனடியாக வழங்குவதாக உறுதியளித்து மனுக் களை பெற்றனர். ஆனால் பேச்சுவார்த்தைக்கு போன சங்க நிர்வாகி களை அலட்சியபடுத்தும் விதமாக வட்டார வளர்ச்சி அலுவலர் நாராயணன் மற்றும் ஊழியர்கள் நாற்காலியில் அமர்ந்து கொண்டு சங்க நிர்வாகிகளை நிற்கவைத்துக் கொண்டே பேச்சுவார்த்தை நடத்தினர். மாவட்ட ஆட்சியரே மக்க ளோடு மக்களாக கிராமசபைக் கூட்டத்தில் தரையில் அமர்ந்து மனுக்களை பெற்று வரும் நிலையில் இது போன்ற அதிகாரி களின் செயல் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி யது.