tamilnadu

விருதுநகரில் விவசாயிகள் கெளரவிப்பு

விருதுநகர், மே 18- கொரோனா காலத்தில் மக்களுக்காக இடையறாது பணி யாற்றிவரும் விவசாயிகளை பாராட்டு நிகழ்வு சிங்கராஜா கோட்டை தொடக்க வேளாணமை கூட்டுறவு சங்கம் சார்பில்  நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழக விவசாய சங்க தலைவர் ராம ச்சந்திரராஜா, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலை வர் விஜயமுருகன், வேளாண்துறை அதிகாரிகள் மற்றும் துளி  அமைப்பினர் பங்கேற்றனர். இந் நிகழ்வில் ரூ.2 லட்சம் செல வில் ஆதரவற்றோர் 200 பேருக்கு தினசரி உணவு வழங்கிய  இளைஞர்கள் பாராட்டப்பட்டனர்.

தேவதானத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றியத் தலைவர் வனராஜ் தலைமையில் நடைபெற்ற நிக ழ்வில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயற்குழு  உறுப்பினர் குருசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் ராமர்,  பால்சாமி, செட்டியார்பட்டி நகர் செயலாளர் சந்திரகுமார், முனி யசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டு விவசாயிகளை கௌர வித்தனர். குறிச்சியார்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர் மம்சாபுரம் பேரூராட்சியில் வட்டாரத் தலைவர் பெருமாள் தலைமையில் விவசாயிகள் கௌரவிக்கப்பட்டனர் நிகழ்வில்  தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் முத்தையா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா ளர் அர்ஜூனன் கலந்துகொண்டு 25-க்கும் மேற்பட்ட விவசா யிகளை கௌரவித்தனர்.