tamilnadu

img

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு

ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவிற்கு புவிசார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
தமிழகத்தில் காஞ்சிப்பட்டு, மதுரை மல்லி, திண்டுக்கல் பூட்டு, பழனி பஞ்சாமிர்தம், கண்டாங்கி சேலை, கொடைக்கானல் மலைப்பூண்டு உள்ளிட்ட பொருட்களுக்கு புவி சார் குறியீடு வழங்கப்பட்டுள்ளது. 
இந்நிலையில் தற்போது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளது. ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு புவிசார் குறியீடு கோரி, அதனை வழங்கும் பதிவு அலுவலகத்தில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால் உற்பத்தியாளர்கள் சங்கம் விண்ணப்பித்திருந்தது. இதன் அடிப்படையில், ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவாவுக்கு இன்று (செப்.10) புவிசார் குறியீடு வழங்கப்பட்டது. 
 

;