tamilnadu

img

ஒகேனக்கல்லை முடக்கிய மாவட்ட நிர்வாகம் வாழ்வாதாரம் இழந்த தொழிலாளர்கள்

பென்னாகரம், அக்.18- ஒகேனக்கல் சுற்றுலா தலத்தில் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் மாவட்ட நிர்வாகத்தைக் கண்டித்து சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் வெள்ளியன்று நடைபெற்றது. தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் நீர்வீழ்ச்சியில் கடந்த மூன்று மாத காலமாக பரிசல் இயக்க மாவட்ட  நிர்வாகம் தொடர்ந்து தடை விதித்து வருகிறது. இதனால் பரிசல் ஓட்டும் தொழிலாளர்கள், மீன்பிடி தொழி லாளர்கள், சமையல் தொழிலாளர்கள், வியாபாரிகள்  மற்றும் விடுதி உரிமை யாளர்கள் என அனைத்து தரப்பினரும் கடுமையாக பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். 

எனவே 30. 10. 2017 அன்று மாற்று பரிகார நீதிமன்றம் மூலம் ஒப்புக் கொண்ட அடிப்படையில் ஒகேனக்கல் ஆற்றில் மாமரத்து கடவு, ஊட்டமலை, கொத்திகல்  ஆகிய மூன்று வழித்தடங்களில் நீர்வரத்துக்கு ஏற்ப  பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக அனுமதி வழங்க வேண்டும்.  மேலும் பரிசலில் செல்லும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் பரிசல் ஓட்டுபவர் களுக்கு தேவையான  பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். பரிசல் இயக்க முடியாத காலத்தில் பரிசல் ஓட்டும் தொழிலாளர்களுக்கு உரிய நிவாரண தொகை வழங்க வேண்டும். சமையல் தொழிலாளர்களுக்கு பாதுகாப்பான இடம் வழங்கி அவர்களுக்கு தேவை யான அனைத்து வசதிகளும் செய்து  கொடுக்க வேண்டும். மசாஜ் தொழி லாளர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் வரக்கூடிய வருமானத்தை முழுமையாக ஒகேனக்கல் சுற்றுலா தளத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்த வேண்டும். ஒகேனக்கல் சுற்றுலா தளத்தில் உள்ள சிறுவர் பூங்கா மற்றும்  ஆரணிய பூங்கா உள்ளிட்ட மெயின் அருவிக்கு செல்கிற வழியிலுள்ள நுழைவாயிலை உடனடியாக திறக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளியன்று சிஐடியு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் பொறுப்பாளர் ராஜூ தலைமை வகித்தார். பரிசல் சங்கத் தலைவர் பரதன், செயலாளர் பிரபு, பொரு ளாளர் ஹெச்.ஆர்.ராஜா, சமையல் சங்க தலைவர் எஸ்.கல்யாணி, சரோஜா, கவிதா, லதா, வெங்கடம் மாள் ஆகியோர் முன்னிலை வகித்த னர். சிஐடியு மாநில செயலாளர் ஜி.நாக ராஜன் துவக்கி வைத்து உரையாற்றி னார். 

சிஐடியு மாநில துணைத்தலைவர் எம்.சந்திரன் சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், மாற்றுப் பரிகார நீதிமன்றத்தின் மூலம் ஒப்புக்கொண்ட அனைத்து கோரிக்கை களையும் உடனடியாக மாவட்ட நிர்வாகம் நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்ற மறுத்தால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுப் போம். மேலும், இதுகுறித்து மாநில அமைச்சரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். அதைத்தொடர்ந்து அக்டோபர் மாதம் 30 ஆம் தேதிக்கு  பிறகு மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் குடும்பத்தோடு காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட உள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார். முன்னதாக, ஒகேனக்கல்லில் நடைபெற்ற கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்து வியாபாரிகள், விடுதிகள், சமையல் தொழிலாளர்கள் மற்றும் மசாஜ் தொழிலாளர்கள் அனைவரும் வேலை நிறுத்தம் செய்து இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். இப்போராட்டத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

;