tamilnadu

img

ரூ.2000 பொங்கல் பரிசாக வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, நவ.27- வீட்டு வரி, தொழில் வரி களை 100 முதல் 50 சதவீதம் உயர்த்தியதை திரும்பப் பெற வேண்டும். துவாக் குடி பகுதியில் வேலையின்றி தவிக்கும் ஏழை குடும்பங்க ளுக்கு பொங்கல் பரிசாக ரூ.1000 என்பதை ரூ.2000 மாக வழங்க வேண்டும். ராவுத்தா மேடு கிழக்கு முதல் பெல்நகர் வரை உள்ள மெயின் சாலை யில் இருபுறமும் உள்ள முள்செடிகளை அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியு றுத்தி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருவெறும் பூர் ஒன்றியக்குழு சார்பில் ராவுத்தாமேடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயற்குழு உறுப்பி னர் மல்லிகா தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை விளக்கி திருவெறும்பூர் ஒன்றிய செயலாளர் நடரா ஜன், மாவட்டக்குழு உறுப்பி னர் பழனிசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் தங்கவேல், மாரியம்மாள், வி.ச.மாவட்ட பொருளாளர் ராதா கிருஷ்ணன் ஆகியோர் பேசி னர். அலெக்ஸ், மணி, ராஜன், பால்சன், மகாலிங்கம், அப்துல் கரீம் மற்றும் பெல்நகர், ராவத்தாமேடு மேற்கு, கிழக்கு பகுதி கிளை உறுப்பி னர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளை செயலாளர் முருகேசன் நன்றி கூறினார்.

;