விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் ஊராட்சி ஒன்றியத்திற்குட் பட்ட கந்தாடு கிராம மக்களுக்கு நூறு நாள் வேலை கேட்டு அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் கிளைத் தலைவர் ஜெ.ராஜா தலைமையில் நடந்த
ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் வி.அர்ச்சுணன், மாவட்டச் செயலாளர் கே.சுந்தரமூர்த்தி, சிபிஎம் வட்டச் செயலாளர் டி.இராமதாஸ் ஆகியோர் கலந்து கொண்டு உரையாற்றினர். வட்டச் செயலாளர் இராஜேந்திரன், தலைவர் ஆர்.உலகநாதன், பொருளாளர் மனோகரன், வட்டக்குழு உறுப்பினர் ரவிச்சந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.