tamilnadu

மீன்வள உதவியாளர் பணிக்கு அழைப்பு

விழுப்புரம், ஜன.12- விழுப்புரம் மாவட்ட மீன் வளத் துறை உதவி இயக்குநர் அலுவலகத்தில் காலியாக உள்ள மீன் வள உதவியாளர் பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் மீன் வள உதவியாளர் பணியிடத்துக்கு (எஸ்.சி. முன்னுரிமை பெற்றவர்) விண்ணப்பிப்பவர்களுக்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்திருக்க வேண்டும்.  8-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீச்சல், மீன்பிடி தொழில், புதிய வலை பின்னுதல், பழுதுபட்ட வலையை பழுது நீக்கம் செய்தல், பரிசல் இயக்கத் தெரிந்திருக்க வேண்டும். மீன் வளத் துறையின் மூலமாக நடத்தப்பட்ட பயிற்சிகள் தொடர்பான சான்றிதழ் பெற்றவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். நீச்சல் குளம் அல்லது தகுதியான நீர்நிலைகளில் முதல் நிலை நீச்சல் திறன் தொடர்பான பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கடந்த 01.07.2019 அன்று வயது உச்சவரம்பு 35-க்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்குத் தேர்வு செய்யப்படுபவருக்கு அடிப்படை ஊதியமாக ரூ.15,900 வழங்கப்படும். விண்ணப்பதாரர்களின் மேற்கண்ட தகுதி களை பரிசோதனை செய்து, விதிகளின்படி நேர்காணல் நடத்தப்படும்.  விண்ணப்பதாரர்கள் கல்விச் சான்றிதழ், குடும்ப அட்டை, ஆதர் அட்டை, வயது, சாதி, இருப்பிடச் சான்று  நகல்கள், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படம் ஆகியவற்றை விண்ணப்பத்துடன் இணைத்து மீன் துறை உதவி இயக்குநர், வழுதரெட்டி, விழுப்புரம் 605 401 என்ற முகவரிக்கு பிப்ரவரி 12ஆம் தேதி மாலை 5 மணிக்குள் கிடைக்கும் வகையில் அனுப்ப வேண்டும் என அதில் தெரி விக்கப்பட்டுள்ளது.

;