நாமக்கல், அக்.22- நாமக்கல் அருகேயுள்ள கொன்னையார் கிராம ஆசிரியர் காலனியில் அடுத் தடுத்த வீடுகளில் கொள்ளை முயற்சி நடை பெற்ற சம்பவம் பொது மக்களிடையே பெரும் அச் சத்தை ஏற்படுத்தி உள்ளது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு வட்டத்திற்குட்பட்ட எலச்சி பாளையம் அருகே கொன் னையார் கிராமம் ஆசிரியர் காலனியில் 50க்கும் மேற் பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.இப் பகுதியில் கடந்த சில வாரங் களுக்கு முன்பு போட்டோ கிராபர் ஸ்ரீதர் வீட்டில் பத்து பவுன் நகையும், 15 ஆயிரம் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டது. இந்நிலையில் செவ்வாயன்று மீண்டும் போட்டோகிராபர் ஸ்ரீதர் வீடு, ஆசிரியர் சீரங்கன் வீடு மற்றும் விசைத்தறி தொழி லாளி துரைசாமி வீட்டிலும் அடுத்தடுத்து கதவு, பீரோக்கள் உடைக்கப்பட்டு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் ஏதும் கிடைக்காததால் கொள் ளையர்கள் பெரும் ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றுள்ளனர். இந்த கொள்ளை முயற்சி சம்பவத்தால் இப்பகுதி மக்கள் பெரும் அச்சத்திற்குள்ளாகியுள்ளனர்.