tamilnadu

img

விருதுநகரில் அனைத்து சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

விருதுநகர், ஜூலை 4- மத்திய, மாநில அரசுகளின் தொழிலா ளர் விரோதப் போக்கைக் கண்டித்தும் கொரோனா காலத்தில் தொழிலாளர்கள் அனைவருக்கும்  மாதம் ரூ.7,500 10 கிலோ உணவுப் பொருள்களை வழங்க வேண்டு மென விருதுநகர் மாவட்டம் முழுவதும் அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் 115 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் 1,750 பேர் கலந்து கொண்டனர். சிஐடியு மாவட்டச் செயலாளர் பி.என் தேவா, மாவட்டத் தலைவர் எம். மகாலட்சுமி, பொருளாளர் வி.ஆர். செல்லச்சாமி, மாநி லக்குழு உறுப்பினர்கள் எம்.அசோகன, ஆர். பாலசுப்பிரமணியன், ஏஐடியுசி சார்பில் முத்துமாரி, சமுத்திரம், தொமுச பேரவைச் செயலாளர்  பால்பாண்டியன், மாடசாமி, எல்எல்எப் சார்பில் சக்திவேல், எம்எல்எப் மாநில செயலாளர் காதர் மொஹ்தீன் உள் ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
திருவில்லிபுத்தூர்
இராஜபாளையம் நகர், கிழக்கு மேற்கு ஒன்றியங்கள், திருவில்லிபுத்தூர் நகரில் பத்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. சிஐடியு மாநிலக்குழு உறுப்பினர் திருமலை மாவட்ட குழு உறுப்பினர் வீரச தானந்தம் உள்ளிட்ட அனைத்து சங்கத்தி னர் கலந்துகொண்டனர். தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக திருவில்லிபுத்தூர் கிளை முன்பு சிஐடியு சார்பில் மாவட்டத் தலைவர் மகாலட்சுமி, இராஜபாளைய கிழக்கு ஒன்றியத்தில் விசைத்தறி தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சோமசுந்தரம் இராஜ பாளையம் மேற்கு ஒன்றியத்தில் சிஐடியு நிர்வாகி குருசாமி மாவட்டத் துணைத் தலைவர் மாரியப்பன், இராஜபாளையம் நகரில் ஐந்து இடங்களில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது சிஐடியு நகர் கன்வீனர் சுப்பிர மணியன் மாரியப்பன், மாவட்டத் துணைத் தலைவர் கணேசன் மாவட்ட குழு உறுப்பி னர் பன்னீர்செல்வம் பிஎஸ்என்எல் ஊழியர் சங்கத்தின் சார்பில் சிவஞானம், கண்ணன் உள்ளிட்ட அனைத்து சங்கத்தினர் கலந்து கொண்டனர்.
திண்டுக்கல் ஜேசிடியு ஆர்ப்பாட்டம் 
திண்டுக்கல் பழனி சாலையில் உள்ள எல்.ஐ.சி.யூனிட் 1 முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்.ஏ.டி.வாஞ்சிநாதன் தலைமை வகித்தார். அரசு ஊழியர் சங்க மாவட்டச் செயலாளர் முபாரக் அலி, ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் ஜேம்ஸ், ஊரக வளர்ச்சி துறை ஊழியர் சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் ராம மூர்த்தி, வைத்தியலிங்க பூபதி (பிஎஸ் என்எல் எம்ளாயீஸ் யூனியன்), எம்.சுருளி வேலு (ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்கம்), பொது இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பாக பெரியசாமி, கௌதமன், எல்.ஐ.சி. ஊழியர் சங்கம் சார்பாக பாரத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

;