விருதுநகர்:
விருதுநகர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் போட்டியிடுகிறார். இவர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.அர்ஜூனன், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர் எல்.முருகன் உள்ளிட்ட தலைவர்களை சந்தித்து தேர்தல் வெற்றி, பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வெற்றிக்கு துணை நிற்கும். பாஜக-வை வீழ்த்துவோம் என உறுதியளித்தனர். வேட்பாளருடன் திமுக நகர் செயலாளர் எஸ்.ஆர்.எஸ்.தனபாலன், தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ஆர்.பி.மதியழகன் ஆகியோர் வந்திருந்தனர்,