கேரளாவில் திருவல்லா, பத்தனம்திட்டா ஆகிய இடங்களில் தமிழகத்தின் கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களைச் சேர்ந்த 20 தொழிலாளர்கள், ஊரடங்கு காரணமாக ஊருக்கு திரும்ப முடியாத நிலையில் உதவிகள் தேவை என்று வாலிபர் சங்கத்தை தொடர்பு கொண்டனர். சங்கத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் எஸ்.பாலாவின் தலையீட்டின் பேரில் கேரளத்து வாலிபர் சங்க தோழர்கள், மேற்கண்ட தொழிலாளர்களை உடனடியாக நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான உணவு பொருள் உள்ளிட்ட உதவிகளை செய்து தந்துள்ளனர்.